ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
12/3/2020 3:53:35 AM
ஆலங்குளம், டிச.3: ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் பஞ்சாயத்து சிவலிங்கபும் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் குணா (24). ஐடிஐ படித்து விட்டு வேலை கிடைக்காததால் தந்தையின் டீக்கடையில் உதவியாக வேலை செய்து வந்துள்ளார். குணாவின் வீட்டின் அருகே அவரது உறவினர் முருகேசன் என்பவர் வீடு கட்டி வருகிறார். நேற்று காலை அந்த வீட்டின் அருகே குணா சென்றபோது எதிர்பாராதவிதமாக மின்சார வயர் மீது குணாவின் கைப்பட்டதாக தெரிகிறது. உடனே மின்சாரம் தாக்கியதில் குணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த ஆலங்குளம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நாங்குநேரி, மானூரில் எல்லை பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு
வெடிமருந்து கிடங்கு கல் குவாரிகளில் ஆய்வு
மேலப்பாவூர் குளத்தில் பனை விதைகள் விதைப்பு சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்
மானூர் அருகே டாஸ்மாக் பாரில் பறக்கும் படை சோதனை
கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
மாநில அளவிலான எறிபந்து போட்டி தென்காசி அணிக்கு பாராட்டு
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!