மின்விளக்கு எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கும் பாலம் அருப்புக்கோட்டை மக்கள் அச்சம்
12/3/2020 3:50:43 AM
அருப்புக்கோட்டை, டிச. 3: அருப்புக்கோட்டையில் ரயில்வே மேம்பாலத்தின் மின்விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அருப்புக்கோட்டை- மதுரை ரோட்டில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாகத்தான் மதுரை மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல முடியும். தவிர பாலத்தின் மறுபக்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், மகளிர், தாலுகா காவல்நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளன. மேலும் திருக்குமரன்நகர், இ.பி காலனி, ராஜீவ்நகர், பாலையம்பட்டி, கோபாலபுரம் உட்பட்ட கிராமங்களுக்கும் இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் தினமும் ஏராளமான வாகனங்கள் இப்பாலத்தின் வழியாக சென்று வருகின்றன. இப்பாலத்தின் ஒரு பகுதி ஊராட்சி, ஒரு பகுதி நகராட்சி பராமரிப்பில் உள்ளது. பாலத்தின் ஒரு பகுதியில் மட்டும்தான் மின்விளக்குகள் உள்ளது. அதுவும் எரியாததால் இரவுநேரங்களில் பாலம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் மோதி விபத்திற்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருட்டை பயன்படுத்தி டூவீலர்களில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவமும் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் அவசரத்திற்கு கூட இப்பாலத்தை கடந்து வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பாலத்தின் ஒரு பகுதியில் மின்விளக்குகள் அமைப்பதுடன், ஊராட்சியும், நகராட்சியும் இணைந்து எரியாத மின்விளக்குகளை பழுதுநீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திருச்சுழி மாரியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
திருவில்லிபுத்தூரில் பகலிலும் எரியும் தெருவிளக்குகள்
திருச்சுழி அருகே ஆடு வளர்ப்போருக்கு விழிப்புணர்வு கூட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அரசுப்பணிகள் 8வது நாளாக முடக்கம்
விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டம் மயங்கி விழுந்த பெண் ஊழியரால் பரபரப்பு
காலமுறை ஊதியம் கோரி கிராம உதவியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!