வத்தலக்குண்டு அருகே ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி
12/3/2020 3:43:55 AM
பட்டிவீரன்பட்டி, டிச. 3: வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி காலனியில் தனியார் மைக்ரோ பைனான்ஸ் வங்கியின் கீழ்தளத்தில் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. நேற்று முன்தினம் இதில் பணம் நிரப்புவதற்காக வங்கி பணியாளர்கள் வந்த போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் நள்ளிரவில் தனது உருவம் தெரியாதவாறு தலையில் முண்டாசு கட்டி கையில் ஆயுதத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை ஒருவர் உடைக்க முயன்ற காட்சி பதிவாகியிருந்தது. அவரால் இயந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதனால் அப்படியே விட்டுவிட்டு கதவை திறந்து வெளியே செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த லட்சக்கணக்காண பணம் தப்பியது. இதுகுறித்து தனியார் வங்கி கொடுத்த புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தராசில் அரசு முத்திரை உள்ளதா? விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்
வேளாண்துறை அட்வைஸ் பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்க மண்ணுக்கேற்ற உரம் அவசியம்
கோபால்பட்டியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலையில் படுத்து போராட்டம்
இலவச சைக்கிள் வழங்கல்
பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!