மார்க்சிஸ்ட் கட்சியின் பேரவைக்கூட்டம்
12/3/2020 3:23:51 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் இ.சங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் ஒன்றுபட்ட காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக செயல்பட்டு வருகிறது இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுவை இரண்டாகப் பிரிப்பது என கட்சியின் மாநிலக் குழு முடிவின்படி காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைநகர் டெல்லியில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு டிசம்பர் 4 முதல் தொடர் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
பல கோடி மதிப்பில் அரசு துறை கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்
மணிகண்டீஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்டம்
திமுக முன்னாள் எம்எல்ஏ இல்ல திருமணம்: டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்பு
படூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு? அங்கத்தினர் சரமாரி புகார்
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்