எஸ்சி,எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகையை முடக்கினால் போராட்டம்
12/3/2020 1:45:12 AM
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தை கைவிடுவதற்கு மத்திய பாஜ அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியை தருகிறது. எனவே, பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் 11, 12ம் வகுப்புகளில் படிப்பதற்கு மத்திய அரசிடமிருந்து பெற்று வருகிற கல்வி உதவித்தொகையை மத்திய பாஜ அரசு குறைப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இதில் பிரதமர் மோடி தலையிட்டு பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை மீண்டும் தொடர்கிற வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், மத்திய பாஜ அரசின் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டத்தை முடக்குகிற நடவடிக்கைக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.
மேலும் செய்திகள்
உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் படியே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது: அரசு பதில்
சுங்கச்சாவடி - விம்கோ நகர் சாலை அமைக்கும் பணி துவக்கம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
லேப்டாப் கேட்டு மாணவர்கள் மறியல்
தாய் குறித்து தவறாக பேசியதால் ஆத்திரம் டீ மாஸ்டரின் கண்கள் தோண்டி எடுப்பு: போதை நண்பர் கைது: மெரினாவில் கொடூர சம்பவம்
மணலி எம்எப்எல் மத்திய அரசு நிறுவனத்தின் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்: வெளிமாநிலத்தவரை அழைத்து வர எதிர்ப்பு
மீனவர்கள் சாலை மறியல்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்