குழந்தை பெற்ற 16 வயது சிறுமி: சிறுவன் கைது
12/3/2020 1:45:00 AM
பெரம்பூர்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை அவளது பெற்றோர் வியாசர்பாடியில் உள்ள உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்த்துக்கொள்ள கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், எதிர் வீட்டில் இருந்த 17 வயது சிறுவனுடன் அந்த சிறுமிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திகொண்ட அந்த சிறுவன் அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் உறவினர்களும் மூடி மறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் சிறுமிக்கு பிரசவ வலி எடுத்து ராயபுரத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு ஆண் குழுந்தை பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் எம்.கே.பி.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர்செல்வி மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார். அதில் தனது எதிர் வீட்டில் உள்ள 17 வயது சிறுவன் தன்னை பலமுறை திருமண ஆசை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தாள். இதனையடுத்து அந்த சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
போக்சோவில் முதியவர் கைது
அரும்பாக்கத்தை சேர்ந்த 4 வயது சிறுமி நேற்று மாலை வீட்டின் படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிதம்பரநாதன்(55) என்பவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின்பேரில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் சிதம்பரநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழகம் வெற்றிநடை போடவில்லை வெட்கி தலைகுனிந்து நடைபோடுகிறது: கனிமொழி எம்பி ஆவேசம்
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி திரைப்பட இயக்குநர் ₹9.5 லட்சம் மோசடி: வாலிபர் புகார்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீர் தர்ணா
சீல் வைக்கப்பட்ட வீட்டினுள் உணவின்றி தவிக்கும் நாய்கள்: அயனாவரத்தில் பரிதாபம்
பெண் கொலை வழக்கில் 3 பேர் கைது 80 சவரனை கொள்ளையடித்த போது கூச்சலிட்டதால் வெட்டி கொன்றோம்: பரபரப்பு வாக்குமூலம்
விடுமுறை நாளில் சுற்றுலா வந்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை, மகன், மகள் பரிதாப பலி
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்