அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
12/2/2020 4:24:07 AM
திருப்பூர், டிச.2: திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. 29வது வார்டுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் பிச்சம்பாளையம் புதூரில் நடைபெற்றது. வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் தலைமை வகித்தார். 29வது வட்ட கழக செயலாளர் கனகராஜ் வரவேற்றார். இதில், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: திருப்பூர் மாநகரில், 2 பஸ் நிலையங்கள், பல கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மார்க்கெட் வளாகம், இரண்டு பெரிய பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மருத்துவக் கல்லூரி வேண்டும் என கேட்டீர்கள்.
முதல்வர் பழனிசாமி, தற்போது கொடுத்திருக்கிறார். எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமாரும், குணசேகரனும் முதல்வரிடம் பேசி, மேட்டுப்பாளையம் மற்றும் பவானி ஆற்றுநீரை திருப்பூர் கொண்டு வந்துள்ளனர். இப்பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்து விடும். தமிழகத்துக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க, வரும் தேர்தலில் தமிழக முதல்வராக பழனிசாமியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். கட்சியின் நம்பிக்கைக்கு உரியவர்களை பூத் கமிட்டி உறுப்பினர்களாக நியமிப்பது உட்பட, தேர்தல் பணிகளை இன்னும் ஒரு வார காலத்துக்குள் கட்சிக்குள் செய்து முடிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி நந்தினியின் படிப்புக்கு ரூ.10 ஆயிரத்தை கனகராஜ் வழங்கினார். இதில் அமைப்பு செயலாளர் சிவசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் திருப்பூர் மாநகரில் கொடி அணிவகுப்பு
ஸ்டாலின் விளம்பர பாதகைகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகளை திமுகவினர் முற்றுகை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுபாட்டு அறை திறப்பு
மூலப்பொருட்கள் விலை உயர்வு எலாஸ்டிக் விலை 30 சதவீதம் உயர்வு சங்க கூட்டத்தில் தீர்மானம்
5 கடைகளில் தொடர் திருட்டு சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு போலீஸ் விசாரணை
விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டுக்கான இயக்கம்
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!