பொள்ளாச்சியில் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை
12/2/2020 4:20:40 AM
பொள்ளாச்சி, டிச.2: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு பகுதியில் பெரியார் காலனி, மணியார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சப் கலெக்டர் வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். 1965ம் ஆண்டு பொள்ளாச்சியில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் கூறியபோது, பொள்ளாச்சி பகுதியில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்திற்கு கொண்டு சென்று மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு கோவையில் 30,62,744 வாக்காளர்கள்
6 மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத இரும்புக் கடைக்கு பூட்டு
476 கிலோ குட்கா பறிமுதல்
போலீஸ் தடையை மீறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
அரிய வகை மஞ்சள்கோடு வரியன் பாம்பு மீட்பு
டெங்கு தடுப்பு பணி மாநகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்