சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் திருச்சி ஐயப்பன் கோயில் நெய் அபிஷேகத்தில் பங்கேற்கலாம்
12/1/2020 3:21:11 AM
திருச்சி, நவ.30: திருச்சி ஐயப்ப சங்கம் செயலாளர் வெள்ளாந்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கு காரணமாக சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்று நெய் அபிஷேகம் செய்ய இயலாத பக்தர்கள் திருச்சி கன்டோன்மென்ட் கோர்ட் அருகே அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு வந்து நெய் அபிஷேகத்துக்கு கொடுத்து அபிஷேக நெய், விபூதி பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம். காலை 7.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை தரிசன நேரமாகும். இருமுடியிலிருந்து சேகரித்த நெய்யும், தனியாக பக்தர்கள் கொடுக்கும் நெய்யும் பகவான் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து நெய் பிரசாதமாக வழங்கப்படும். அரசாங்கம் அறிவித்துள்ள வழிகாட்டுதலைப் பின்பற்றி பக்தர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்தும், முக கவசம் அணிதலும் அவசியம். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள செல்ல முடியாது. நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும் சமயத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு திருச்சி மாவட்டத்தில் 23,32,886 வாக்காளர்கள்
புதிதாக 72,447 பேர் சேர்ப்பு ஹம்சவாகனத்தில் நம்பெருமாள் தண்ணீர் கலந்து மதுவிற்ற ரவுடி கைது
லேத் பட்டறை மெக்கானிக்கிடம் கத்தியைகாட்டி பணம் பறித்தவர் கைது
திருச்சி-தஞ்சை திருமண்டலத்தின் 37வது பேரவைக்கூட்டம்
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்
நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்