மணப்பாறை அருகே பரபரப்பு பிரதமரின் காப்பீடு திட்ட கார்டுக்கு ரூ.100 வசூலிப்பு
12/1/2020 3:21:03 AM
மணப்பாறை, நவ.30: மணப்பாறை அருகே பிரதமரின் காப்பீடு திட்ட கார்டு பெற்றுத்தருகிறேன் என 57 பேரிடம் தலா ரூ.100 வசூலித்த ஆசாமி போலீசிடம் சிக்கினார். மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டியில் பிரதமர் காப்பீடு திட்ட கார்டு போட்டு தருகிறேன் என்று பொதுமக்களிடம் மர்ம நபர்கள் சிலர் தலா ரூ.100 சட்டத்திற்கு புறம்பாக வசூல் செய்வதாக பாஜகவின் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் சித்தாநத்தம் சுப்ரமணிக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் வந்தது.
இதனையடுத்து பாஜகவின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் கோபால கிருஷ்ணன் மற்றும் ஒன்றிய செயலாளர் பாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது அங்கு தேங்காய்தின்னிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் இரண்டு பெண்களுடன் பிரதமர் காப்பீடு திட்ட கார்டு, லேமினேசன் செய்து தருவதாக அப்பகுதி மக்களிடம் 100 ரூபாய் வசூல் செய்து கொண்டிருந்தார்.
இதனையடுத்து மணப்பாறை டிஎஸ்பி., பிருந்தாவிற்கு புகார் சென்றதையடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில் மணப்பாறை சப்-இன்ஸ்பெக்டர் சதிஸ்குமார் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். அதில் சுமார் 57 பேரிடம் கணேசன் பணம் வாங்கியது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணைக்கு பின்னர் கணேசன் பணத்தை திருப்பி தர ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 57 நபர்களிடம் பெற்ற பணத்தை கணேசன் போலீசார் முன்னிலையில் திருப்பிக் கொடுத்தார். இந்த சம்பவத்தையொட்டி அங்கு ஏராளமான பெண்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு திருச்சி மாவட்டத்தில் 23,32,886 வாக்காளர்கள்
புதிதாக 72,447 பேர் சேர்ப்பு ஹம்சவாகனத்தில் நம்பெருமாள் தண்ணீர் கலந்து மதுவிற்ற ரவுடி கைது
லேத் பட்டறை மெக்கானிக்கிடம் கத்தியைகாட்டி பணம் பறித்தவர் கைது
திருச்சி-தஞ்சை திருமண்டலத்தின் 37வது பேரவைக்கூட்டம்
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்
நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்