கார்த்திகை தீப வழிபாடு
12/1/2020 3:01:46 AM
பொள்ளாச்சி, நவ.30: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் திருகார்த்திகை தீப வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால், இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக, பல்வேறு கோயில்களில், நேற்று திருகார்த்திகை தீப வழிபாடு மிகவும் எளிமையாக நடந்தது. கார்த்திகையையொட்டி, சுப்பிரமணியசாமி கோயில், வெங்கடேசாகாலனி ஐயப்பன்கோயில், கோட்டூர்ரோடு விண்ணளந்த காமாட்சியம்மன், சூலக்கல் மாரியம்மன் கோயில், கடைவீதி மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், பிளேக் மாரியம்மன் கோயில் மற்றும் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில் வளாகத்தின் வெளியே, பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு சென்றனர். அதுபோல் திருக்கார்த்திகையை முன்னிட்டு, கோயில்களில் பெரிய அளவில் விஷேசம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், நகர் மற்றும் கிராம புறங்களில் பலரும், தங்கள் வீட்டு தீபம் ஏற்றி பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மேலும், ஆங்காங்கே சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு கோவையில் 30,62,744 வாக்காளர்கள்
6 மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத இரும்புக் கடைக்கு பூட்டு
476 கிலோ குட்கா பறிமுதல்
போலீஸ் தடையை மீறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
அரிய வகை மஞ்சள்கோடு வரியன் பாம்பு மீட்பு
டெங்கு தடுப்பு பணி மாநகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்