லோடு ஆட்டோ, வேன், மாட்டு வண்டி பறிமுதல் வீரசிங்கம்பேட்டையில் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்காக போலீசாரின் விழிப்புணர்வு பேரணி
12/1/2020 12:15:45 AM
திருவையாறு, டிச. 1: திருவையாறு அடுத்த வீரசிங்கம்பேட்டை கிராமத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் அச்சம், பயம் இல்லாமல் வாழ்வதற்கும் காவல்துறை எந்நேரமும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும், ஆபத்து மற்றும் அவசர காலங்களில் உடனடியாக வந்து பாதுகாப்போம் உட்பட பல நோக்கத்தோடு போலீசாரின் அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். திருவையாறு டிஎஸ்பி சித்திரவேல், ஆயுதப்படை டிஎஸ்பி சம்பத் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு அணிவகுப்பு பேரணியில் போலீசார் பங்கேற்று பொதுமக்களுக்கு எந்தெந்த வகையில் உடனடியாக பாதுகாப்பு வழங்கப்படுகிறது, பொதுமக்கள் அச்சமில்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற செயல்முறை விளக்கம் அளித்தனர். இன்ஸ்பெக்டர்கள் விஜயலெட்சுமி, தேவி, வீரசிங்கம்பேட்டை ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சப்இன்ஸ்பெக்டர்கள் ஞானமுருகன், ஜோஸ்பின்சிசாரா மற்றும் போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் பறவைகளை பாதுகாக்க வனத்துறையினர் ரோந்து
திருக்காட்டுப்பள்ளியில் போலீஸ் விழிப்புணர்வு பேரணி
பாபநாசத்தில் தொழிலதிபர் ஆறுமுகம் இல்ல திருமண வரவேற்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க அழைப்பு
பட்டுக்கோட்டையில் அழுகிய சம்பா பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்
சுவர் இடிந்து பலியான மூதாட்டி குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்