வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் மனைவி கண்ணீர் மனு
12/1/2020 12:09:15 AM
கடலூர், டிச. 1: கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே புதுநகரை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி விரோணிக்கால்(35). இவர் தனது குழந்தைகளுடன் கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எனது கணவர் ராஜேஷ், ஓமன் நாட்டில் மஸ்கட் என்ற இடத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 24ம் தேதி விபத்தில் சிக்கிய அவர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 28ம் தேதி அவர் இறந்து விட்டதாக செல்போனில் எனக்கு தகவல் வந்தது. இதனால் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.என குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும் செய்திகள்
ஆட்சியை கவிழ்க்க துணை போனவர்கள் இனி அரசியலில் தலையெடுக்கக் கூடாது திருமாவளவன் எம்பி ஆவேசம்
பாஜகவுடன் கூட்டணி சேரும் என்ஆர் காங்., அதிமுக சாம்பலாகி விடும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாபம்
குழந்தைகளுக்கு புரதச்சத்து தேவை உணர்ந்து புதுச்சேரி அங்கன்வாடியில் வாரம் 3 முட்டை வழங்கப்படும் கவர்னர் தமிழிசை அதிரடி
பிரதமர் பாதுகாப்புக்காக துணை ராணுவம் புதுவை வருகை
புதுச்சேரியில் புதிதாக 28 பேருக்கு தொற்று
பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!