உளுந்தூர்பேட்டை போட்டோகிராபர் கொலை வழக்கில் பெண் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை
12/1/2020 12:09:00 AM
உளுந்தூர்பேட்டை, டிச. 1:உளுந்தூர்பேட்டை அருகே பெரிய ஏரியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் காயத்துடன் இறந்து கிடந்த போட்டோகிராபர் கொலை வழக்கில் பெண் உள்ளிட்ட 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பாளையப்பட்டு தெருவில் வசித்து வந்தவர் லட்சுமணன் மகன் மணிகண்டன்(30) போட்டோகிராபர். இவர் வீட்டில் ஸ்டுடியோ கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை பெரிய ஏரியில் தலையின் பின்பகுதியில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் மணிகண்டன் தாய் ஆராயி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக டிஎஸ்பி விஜிகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், ராதாகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து வருந்தனர். இந்நிலையில் மணிகண்டன் கடைசியாக பேசிய செல்போன் தொடர்புகளை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை பிடித்து அவர்களிடம் மணிகண்டன் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனா பாதிப்பு இல்லை
ஆண் குழந்தை கடத்தல்?
அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உதவி பேராசிரியர்கள் திடீர் போராட்டம்
நாதஸ்வர வித்வான் லாரி மோதி சாவு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
பதுக்கி வைத்து பெட்ரோல் விற்பனை: 2 பேர் மீது வழக்கு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்