தீபாவளி சீட்டு நடத்தி மோசடி நகைக்கடை உரிமையாளர் பல லட்சத்துடன் ஓட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் மறியல்
12/1/2020 12:05:15 AM
பூந்தமல்லி: தீபாவளி சீட்டு நடத்தி, பல லட்சத்துடன் தலைமறைவான நகைக்கடை உரிமையாளரை கைது செய்ய கோரி, பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போரூர் நான்கு சாலை சந்திப்பில் மனோஜ் என்பவர் நகைக்கடை நடத்தி வந்தார். இவர், மாதம்தோறும் ரூ.500 முதல் ரூ.1500 வரை தீபாவளி நகை சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணம் கட்டி வந்தனர்.கட்டிய தொகைக்கு ஏற்ப நகை, வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்து இருந்தார். ஆனால், அதன்படி வழங்கவில்லை. சீட்டு கட்டியவர்கள் இதுபற்றி கேட்டபோது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. அதனால், விரைவில் கொடுத்து விடுகிறேன், என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நகைக்கடை திறக்கப்படவில்லை. இதையறிந்த வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு சென்றபோது, வீடும் பூட்டப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், போலீசில் புகார் அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், கடை முன்பு பலமுறை போராட்டம் நடத்தினர். ஆனாலும் நடவடிக்கை இல்லை.இதனால், பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று நகைக் கடையை முற்றுகையிட்டு, மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வளசரவாக்கம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.
மேலும் செய்திகள்
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழகம் வெற்றிநடை போடவில்லை வெட்கி தலைகுனிந்து நடைபோடுகிறது: கனிமொழி எம்பி ஆவேசம்
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி திரைப்பட இயக்குநர் ₹9.5 லட்சம் மோசடி: வாலிபர் புகார்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீர் தர்ணா
சீல் வைக்கப்பட்ட வீட்டினுள் உணவின்றி தவிக்கும் நாய்கள்: அயனாவரத்தில் பரிதாபம்
பெண் கொலை வழக்கில் 3 பேர் கைது 80 சவரனை கொள்ளையடித்த போது கூச்சலிட்டதால் வெட்டி கொன்றோம்: பரபரப்பு வாக்குமூலம்
விடுமுறை நாளில் சுற்றுலா வந்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை, மகன், மகள் பரிதாப பலி
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்