விளையாடுவதற்கு அனுமதி
11/30/2020 4:42:58 AM
கீழக்கரை, நவ.30: கீழக்கரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழக்கரையில் அரசுக்கு சொந்தமான விளையாட்டு திடல் இல்லாததால், இளைஞர்கள் மிகச் சிரமம் அடைந்து வந்தனர். தனியாருக்கு சொந்தமான விளையாட்டுத் திடலில் பள்ளி மாணவ, மாணவிகளை தவிர்த்து வெளியாட்கள் விளையாட அனுமதிக்க மாட்டார்கள். இந்த நிலையில் வருங்கால விளையாட்டு வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு மேலத் தெருவில் உள்ள உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்திற்கு சொந்தமான ஹமீதியா விளையாட்டு திடலை திறந்து விளையாடுவதற்கு அனுமதி அளித்தனர். இதனால் கீழக்கரையில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் விளையாட்டு மைதானத்தை உபயோகித்து வருகின்றனர். விளையாட்டு மைதானத்தை திறக்க துவக்க விழா நடைபெற்றது. இதில் உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள் சுலைமான், மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஆர்எஸ்.மங்கலம் அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் பறக்கும் படையினர் அதிரடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக 278 வாக்குச்சாவடிகள் அமைப்பு கலெக்டர் தகவல்
வத்தல் வாங்க சென்றவரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
வியாபாரிகளிடம் ரூ.6 லட்சம் பறிமுதல்
டாக்டரின் வைரத்தோடு திருட்டு
பணம் பறிமுதலால் பொருட்கள் வாங்க செல்லும் வியாபாரிகளுக்கு பாதிப்பு
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!