தமிழ் மாநில காங்கிரஸ் 7-ம் ஆண்டு துவக்க விழா
11/30/2020 4:36:46 AM
திருப்பூர், நவ. 30: திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸின் 7ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவின் முதல் நிகழ்வாக பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளும், கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசங்களும் விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து ஏரி பாளையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது. மேலும் இவ்விழாவில் மாவட்டத் தலைவர் ரத்தினவேல், துணைத் தலைவர் நாராயணசாமி, கார்த்திகேயன். மாவட்ட பொருளாளர் நடராஜ், மாநில இளைஞரணி துணை தலைவர் அபிராமி செந்தில்குமார், உடுமலை நகர் தலைவர் பாலகிருஷ்ணன், தாராபுரம் நகர தலைவர் சுப்பிரமணியன், வட்டாரத் தலைவர்கள் ரவிச்சந்திரன், கருப்பசாமி, காளிதாஸ், கனகராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிரசாந்த் குமார், மாவட்ட வர்த்தக அணி தலைவர் தங்கமணி, மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு பறக்கும்படை குழு நியமனம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கவன ஈர்ப்பு கூட்டம்
காங்கயம் மாடுகள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை
ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உடுமலையில் கிரிக்கெட் போட்டி
திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்