மன்னார்குடி அடுத்த வேலூர் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார்
11/30/2020 4:33:42 AM
திருவாரூர், நவ. 30: திருவாரூர் மாவட்டம், வேலூர் ஊராட்சியில் நடைபெற்ற கால்நடை சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்து கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவை, தீவனப்புள் கரணை, தீவன விதை ஆகியவைகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் திருவாரூர் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளாக தாழ்வான பகுதியில் வசித்த மக்களை நிவாரண முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டனர். அந்த முகாம்களில் கொரோனா நோய் தொற்று காலம் மற்றும் மழை காலம் என்பதனை கருத்தில் கொண்டு மக்களின் நலன் காக்கின்ற வகையில் 882 முகாம்களிலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றார். நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் தனபாலன், ஆர்டிஓ புண்ணியக்கோட்டி, கால்நடை பராமரிப்புத்துறையின் உதவி இயக்குநர் விஜயகுமார், ஒன்றிய குழுத்தலைவர் பாஸ்கர், தாசில்தார் ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் நகை, பணம் கொள்ளை
பாபநாசத்தில் திமுகவினர் சைக்கிள் பேரணி
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
ஊதிய உயர்வு வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சாலை மறியல்
230 பேர் கைது உதவி தொகை உயர்த்தக் கோரி அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
தமிழக இடைக்கால பட்ஜெட்டில் தேர்தலை மனதில் கொண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் விவசாயிகள் ஏமாற்றம் என குற்றச்சாட்டு
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!