கே.ஆர்.பி அணையில் நீர்திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
11/30/2020 4:01:43 AM
கிருஷ்ணகிரி, நவ.30: கிருஷ்ணகிரி அணையில் இருந்து 760 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயலால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து கடந்த 2 தினங்களாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு 760 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 50.10 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 760 கனஅடி தண்ணீர் ஆற்றிலும், பாசன கால்வாய்களிலும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கால்வாய் அமைக்க வழங்கிய நிலத்திற்கு இழப்பீடு கேட்டு 150வது முறையாக விவசாயிகள் மனு'
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
சாலை பாதுகாப்பு விழாவையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
கோட்டூர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை
உலக சிக்கன நாள் விழாவில் மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்