திருச்சி மாநகரில் இன்றும், நாளையும் குடிநீர் சப்ளை நிறுத்தம்
11/27/2020 4:41:08 AM
திருச்சி, நவ.27: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அரியமங்கலம் கோட்டம், 7வது வார்டுக்குட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடு, மேல் புறத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கொள்ளிடம் குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட 600 எம்.எம் விட்டமுள்ள பம்பிங் மெயின் உள்ளது. இதன் மூலம் சஞ்சீவி நகர் விறகுபேட்டை, ஜெகநாதபுரம், உக்கடை மகாலெட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம் மற்றும் கல்லுக்குழி ஆகிய 11 மேல்நிலை நிர்தேக்க தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பம்பிங் மெயினில் திருச்சி-தஞ்சை மெயின் ரோட்டில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. மேற்படி குழாய் நீர் கசிவை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலம் பயன்படும் பகுதிகளில் இன்றும், நாளை (28ம் தேதி) ஆகிய இரு நாட்கள் குடிநீர் விநியோகம் இருக்காது. இத்தகவலை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகள்
வரி விளம்பரங்கள் ஞாயிறுதோறும் படியுங்கள் தேர்தல் பாதுகாப்பு பணி திருவானைக்காவல் அருகே கவுத்தரசநல்லூரில் கொத்திப் போட்டதோடு நிறுத்தப்பட்ட சாலை பணி
தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் அனைத்து கட்சியினர் கோரிக்கை விடு
லால்குடி, புள்ளம்பாடி ஒன்றியங்களில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
திருச்சி ஏர்போர்ட்டில் ஜெல் வடிவில் கடத்தி வந்த ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்கள், ேபாலீசார் அணிவகுப்பு நடந்துகூட செல்ல முடியாமல் மக்கள் அவதி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 7ம் தேதி பூச்சொரிதல் விழா துவக்கம்
கே.சாத்தனூர் சார்பதிவாளர் பொறுப்பேற்பு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்