சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மண்ணெண்ணெய், சிலிண்டர்கள் பறிமுதல்
11/27/2020 4:35:13 AM
அறந்தாங்கி, நவ.27:அறந்தாங்கி நகரில் உள்ள ஒரு கடையில் வைத்திருந்த ரேசன் மண்ணெண்ணெய் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களை அறந்தாங்கி குடிமைப்பொருள் வட்ட வழங்கல் அதிகாரி தனி தாசில்தார் பறிமுதல் செய்தார்.
அறந்தாங்கி நகரில் அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் உள்ள அரசு மண்ணெண்ணை வழங்கும் இடத்தின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கடையில் இருந்து அறந்தாங்கி குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் ஜெயாசித்ரகலா வுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அக்கடையில் ஆய்வு செய்தார். அப்போது அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட கூடிய மண்ணெண்ணெய் சுமார் 35 லிட்டரும், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் இரண்டும் தாசில்தார் பறிமுதல் செய்தார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய், கேஸ் சிலிண்டர்களை அறந்தாங்கி குடிமை பொருள் வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர்கள் செந்தில், மதியழகன், கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
இறுதி பட்டியல் வெளியீடு புதுக்கோட்டை மாவட்டத்தில் 13.48 லட்சம் வாக்காளர்கள்
53,124 பேர் புதிதாக சேர்ப்பு கொத்தமங்கலம் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராமசபை கூட்டம்
இந்தியாவிலேயே தாய் சேய் நலம் பேணுவதில் தமிழகம் முதலிடம்
புதுக்கோட்டை அருகே பஸ்சில் பெண்ணிடம் 2 பவுன் செயின் திருட்டு
அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி தொடர் மழையிலும் பாதிக்காத பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி
இராணியார் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு வழிமுறை கடைபிடிக்கப்படுகிறதா? மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்