பாப்பிரெட்டிப்பட்டி அருகே சமையல் காஸ் கசிந்து தீப்பிடித்து தம்பதி பலி
11/27/2020 2:00:14 AM
பாப்பிரெட்டிப்பட்டி, நவ.27: பாப்பிரெட்டிபட்டி அருகே, சமையல் காஸ் கசிந்து தீப்பிடித்து கணவன், மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, வரதகவுண்டனூரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (77) விவசாயி. இவரது மனைவி ராமாயி (75). உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில், வெங்கடாசலம், ராமாயி தனியாக வசித்து வருகின்றனர். நேற்று மாலை வீட்டில் சமையல் செய்ய வெங்கடாசலம் சமையலறையில் காஸ் பற்ற வைத்த போது திடீரென தீ பிடித்தது. இதில் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது. ஏற்கனவே காஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்த நிலையில் அதனை அறியாமல் தீ பற்ற வைத்ததால் தீப்பிடித்துள்ளது. தகவலின் பேரில், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இச்சம்பவத்தில் படுத்த படுக்கையாக கிடந்த ராமாயி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் காயமடைந்த வெங்கடாசலத்தை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு 7 மணிக்கு இறந்தார். இது குறித்து பாப்பிரெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தர்மபுரி நகராட்சி 10வது வார்டில் தார்சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
ரிக் உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம்
10மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு மாவட்டத்தில் 80 சதவீத மாணவர்கள் வருகை
ஓசூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
தர்மபுரி- கொப்பலூருக்கு நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்
ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!