மத்திய- மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
11/27/2020 1:58:20 AM
ஓசூர், நவ.27: மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து, ஓசூர் ராம் நகரில் சிஐடியூ, தொமுச, ஐஎன்டியூசி, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐஎன்டியூசி மாநில தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். எல்பிஎஃப் மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பீட்டர், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் கோவிந்தம்மா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொமுச நிர்வாகி சிவகுமார், சிஐடியூ நிர்வாகிகள் ஆறுமுகம் மற்றும் ராமு, நடைபாதை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், கிருஷ்ணன், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் புவனேஸ்வரி, கஸ்தூரி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் உட்பட கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கோயில் கும்பாபிஷேக விழா
சைக்கிள் வழங்கும் விழா
ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக ஓசூர் வக்கீல் நியமனம்
கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பஞ்.,தலைவருக்கு மக்கள் பாராட்டு
சத்துணவு மையத்தில் ஐஎஸ்ஓ நிறுவன இயக்குநர் ஆய்வு
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்