39 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
11/27/2020 1:58:15 AM
கிருஷ்ணகிரி, நவ.27: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 39 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்தார். காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறையை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பள்ளியில், சுற்றுப்புற தூய்மை, வகுப்பறைகள், ஐடெக் லேப், ஸ்மார்ட் கிளாஸ், ஏடிஎல் லேப், மத்திய அரசினால் வழங்கப்பட்ட ஆட்டோமேட்டிக் லேப், வேளாண் துறை லேப், மூலிகை தோட்டம், குடிநீர், கழிப்பறை வசதிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘மாவட்டத்தில் 4 மாதிரி பள்ளிகள், காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெத்தகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 39 அரசு பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் 2 ஏடிஎல் லேப் மூலம், மாணவர்களுக்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது. இதன்மூலம் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்,’ என்றார்.ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், தலைமையாசிரியர் வளர்மதி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
கோயில் கும்பாபிஷேக விழா
சைக்கிள் வழங்கும் விழா
ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக ஓசூர் வக்கீல் நியமனம்
கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பஞ்.,தலைவருக்கு மக்கள் பாராட்டு
சத்துணவு மையத்தில் ஐஎஸ்ஓ நிறுவன இயக்குநர் ஆய்வு
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்