செல்போன் திருடிய 2 பேர் கைது
11/27/2020 1:57:56 AM
கிருஷ்ணகிரி, நவ.27: கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் அப்பாஸ் (32). இவர், கடந்த 8ம் தேதி கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, கந்திக்குப்பம் அருகே பெட்ரோல் பங்க் முன் டூவீலரில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 2 வாலிபர்கள் வழி கேட்பது போல் நடித்து, திடீரென அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து, அப்பாஸ் கந்திக்குப்பம் போலீசில் புகார் தெரிவித்தார். இந்நிலையில், சூளகிரியில் உள்ள அப்பாஸின் நண்பரது கடைக்கு சென்ற அந்த வாலிபர்கள், செல்போனை பார்மட் செய்வதற்காக கொடுத்துள்ளனர். கடையின் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில், விரைந்த போலீசார் அவர்களை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். இதையடுத்து சூளகிரி பெரியகுடியைச் சேர்ந்த திம்மராஜ்(20), ஒட்டயன்கொட்டாயைச் சேர்ந்த அஜித்குமார்(20) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரி, ஓசூரில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்
தியேட்டர் அதிபர்களுடன் டிஎஸ்பி ஆலோசனை
திமுகவினருக்கு பொங்கல் பரிசு
கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
வரதட்சணையாக நிலத்தை கேட்டு மனைவி கழுத்தை அறுத்த கணவன்
மக்கள் கிராம சபை கூட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்