மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 48 ஆயிரத்தை கடந்தது
11/27/2020 1:53:13 AM
கோவை, நவ. 27: கோவையில் கொரோனா காரணமாக நேற்று 158 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது. இருப்பினும், கடந்த காலங்களைவிட தற்போது கொரோனா காரணமாக பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன்படி, நேற்று கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த மொத்தம் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 133-ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 156 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 849-ஆக உள்ளது. கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 679 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். நேற்று கொரோனா தொற்றினால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 76 வயது முதியவர் மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 94 வயது முதியவர் என 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 605-ஆக உயர்ந்தது.
மேலும் செய்திகள்
தி.மு.க. மக்கள் கிராம சபை மூலம் 9 ஆண்டுகால தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு
போலி பேஸ்புக்கில் பணம் பறிக்கும் கும்பல்
சிறுமுகை விருட்ச பீடத்தில் இன்று கும்பாபிஷேக விழா
கோவையில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை
கோவையில் தே.மு.தி.க. சார்பில் இன்று பொங்கல் விழா பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கிறார்
மலைவாழ் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்