SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளான் போட்டு ெகாள்ளை சிறையில் கூட்டு சேரும் குற்றவாளிகள்

11/27/2020 1:53:04 AM

கோவை, நவ.27:  கோவை சிறையில் குற்றவாளிகள் கூட்டு சேர்ந்து திட்டம் போட்டு ஜாமீனில் வெளியே வந்து கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது.  கோவை மத்திய சிறையில் 1,800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தினமும் 10 முதல் 15 குற்றவாளிகள் குற்ற வழக்குகளில் கைதாகி சிறைக்கு செல்கின்றனர். 5 முதல் 10 கைதிகள் ஜாமீனில் வெளியே செல்கின்றனர். ஆண்டுதோறும் 200 முதல் 300 பேர் சிறையில் இருந்து விடுதலையாகி செல்கிறார்கள். சில கைதிகளை அவர்களது குடும்பத்தினர் ஒதுக்கி வைத்திருப்பதாக தெரிகிறது. தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து வீட்டிற்கு செல்பவர்கள் வேலை வாய்ப்பு, குடும்ப ஆதரவு இல்லாத நிலையில் மீண்டும் குற்ற செயல்களை செய்யும் நிலையிருப்பதாக தெரிகிறது. தண்டனை முடிந்த வெளியே செல்பவர்கள் திருந்தி வாழ்பவர்களாக இருக்கவேண்டும். மீண்டும் வழக்கில் சிக்கி சிறைக்கு வரக்கூடாது என நன்னடத்தை அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால் சிறை சென்று வந்தவர்களுக்கான உதவி திட்டத்தில் சிறை நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை.

கைதிகள் பலர் கூட்டாளிகளுடன் இணைந்து மீண்டும் மீண்டும் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. கோவையில் சமீபத்தில் கைதான கள்ள ரூபாய் நோட்டு கும்பல், சிலை கடத்தல் விற்பனை கும்பல், பீரோ புல்லிங் கும்பல்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இவர்கள் பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்றபோது நட்பு ஏற்பட்டது. வெளிேய சென்றதும் என்ன செய்யலாம் என யோசனை செய்தோம். வெளியே யார் வீட்டில் கொள்ளையடிக்கலாம் என சிறையிலேயே திட்டம் போட்டோம். ஜாமீனில் வந்த பின்னர் கைவரிசை காட்டினோம் என கூறினர். கோவை நகரில் வீட்டில் தனியாக இருந்த முதியவரை தாக்கிய நகை, பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் திட்டமிட்டு வெளியே வந்து திருடியதாகவும், முதியவர் கூச்சலிட்டபோது கொலை செய்து விட்டதாகவும் தெரிவித்தனர். கஞ்சா விற்பனை கும்பல் சிறைக்கு சென்று வெளியே வந்தால் திருந்தால் மீண்டும் மீண்டும் விற்பனையில் ஈடுபடுவதாக தெரிகிறது. கஞ்சா கும்பல் சிறையில் எங்கே எப்படி கஞ்சா வாங்கலாம், எப்படி கடத்தி வரலாம் என கூட்டு சேர்ந்து திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறைத்துறையினர் கூறுகையில், ‘‘கோவை சிறையில் விவசாயம், பேக்கரி தொழில், தையல் கூடம், பேப்பர் கோன் தயாரிப்பு உள்ளிட்ட தொழிற்கூடம் செயல்பட்டு வருகிறது. இதில் தகுதியுள்ள கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளித்து வருகிறோம். நன்றாக பயிற்சி பெற்றவர்கள் தண்டனை காலம் முடிந்து வெளியே செல்லும்போது தொழில் நிறுவனங்களில் சேர்த்து வேலை வாய்ப்பு பெற்று தருகிறோம். சிலர் சுய தொழில் முனைவோராக மாறி விட்டனர்.
இதுவரை சிறைத்துறை பரிந்துரை மூலமாக வேலை வாய்ப்பு பெற்றவர்கள் மீது எந்த புகாரும் வரவில்லை. சிறையில் பல ஆண்டு காலம் கழித்தவர்கள் தண்டனை முடிந்து வெளியே சென்று செக்யூரிட்டி பணியில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். சிறைக்குள் வந்தும் திருந்தாமல் சதி திட்டங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் பணி நடக்கிறது’’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்