வங்கி, கூட்டுறவு சங்கங்களில் பிரீமியம் பெற மறுப்பதால் விவசாயிகள் அதிருப்தி ஆறு முகத்துவாரத்தில் பாதுகாப்பாக நாட்டுப்படகுகள் நிறுத்தி வைப்பு
11/25/2020 3:39:09 AM
சேதுபாவாசத்திரம், நவ. 25: தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சின்னமனை, பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம், கணேசபுரம் உட்பட 32க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 4,500 நாட்டுப்படகுகள் உள்ளன. மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 144 விசைப்படகுகள் உள்ளன. திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் விசைப்படகுகளிலும், பிற நாட்களில் நாட்டுப்படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
தற்போது நிவர் புயல் எதிரொலியால் தஞ்சை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடனும், கடல் சீற்றத்துடனும் காணப்படுவதால் கடந்த 2 நாட்களாக நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. நேற்று முன்தினம் முதல் மீன்பிடி உபகரணங்களை வீடுகளுக்கு எடுத்து சென்று மீனவர்கள் பாதுகாப்பு செய்து வந்தனர். விசைப்படகுகளை துறைமுகத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறுத்தி வைத்துள்ளனர். அதேபோல் நாட்டுப்படகுகளை அம்புளியாறு, அக்கினி ஆறு போன்ற ஆற்று முகத்துவாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றின் படித்துறை சீரமைக்கும் பணி துவக்கம்
தஞ்சை மாவட்டத்தில் கடன் தள்ளுபடி, நிலுவை சான்று உடனே வழங்க வேண்டும் கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை
திருவையாறு தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செயல் விளக்கம் தேர்தல் நடத்தும் அலுவலர் துவக்கி வைத்தார்
அதிராம்பட்டினம் பகுதியில் கழுதை பால் விற்பனை படுஜோர்
பேராவூரணி கடைவீதியில் சாலையில் பரவி கிடந்த மணல் அகற்றம்
பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் 100 சதவீத வாக்களிப்போம் தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!