பேரிடர் குறித்து எந்தவித அறிவுறுத்தலும் இல்லை உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிருப்தி
11/25/2020 3:26:04 AM
மானாமதுரை, நவ.25: மழை வெள்ளம் புயல் காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எந்தவித அறிவுறுத்தலும், நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் மாவட்டம் நிர்வாகம் மந்தமாக இருப்பதாக உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு பெய்து வருகிறது. தற்போது நிவர் புயல் குறித்து மாநில அரசு ஊடகங்களில் விடுத்துள்ள அறிவிப்பை தவிர மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க வில்லை. மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் கண்மாய்கள் நிறைந்து காணப்படுகிறது. எப்போது உடையும் என அச்சத்தில் உள்ளனர். இதுதவிர தாழ்வான பகுதிகளில் உள்ள கிராமங்களில் மழை, கண்மாய் உடைப்பு காரணமாக நீர் சூழ்ந்து மூழ்கும் நிலை ஏற்பட்டால் அவர்களை மீட்க தேவையான உபகரணங்கள் கிராம ஊராட்சிகளில் இல்லை. கிராமங்களில் கண்மாய் உடைப்பு ஏற்பட்டால் உடைந்த கரைகளை சீரமைக்க ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் தேவைப்படும். ஆனால் மானாமதுரை பொதுப்பணித்துறை நீர்வள அலுவலகத்தில் 50க்கும் குறைவான மணல் மூட்டைகளை மட்டுமே அடுக்கி வைத்துள்ளனர். இதை வைத்து ஒரு மடையை கூட அடைக்க முடியாத நிலை உள்ளது.
பேரிடர் மேலாண்மை குறித்து தீயணைப்பு துறையினரும் மழைகாலங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊராட்சி செயலாளர், ஊராட்சித் தலைவர், வார்டு. ஒன்றிய கவுன்சிலர்களுக்கு விளக்குவது உண்டு. இது தவிர தன்னார்வலர் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு விழிப்புணர், பயிற்சியும் வழங்கப்படுவது வழக்கம். இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருப்பதால் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் சிரமம் ஏற்படும் என ஊராட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து ஊராட்சித்தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘பேரிடர் ஏற்பட்டால் பொதுமக்கள், கால்நடைகள், அசையும், அசையா சொத்துகளுக்கு ஏற்படும் இழப்புகளை குறைப்பதற்கான எந்தவித அறிவுரைகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவில்லை. சிறப்பு நிதி ஒதுக்கபடவில்லை, பள்ளிகளில் தஞ்சமடையும் பொதுமக்களுக்கு உணவு, அத்தியாவசி வசதிகள் செய்து தருவதற்கு எந்தவித அறிவுறுத்தலும் இல்லை. கண்மாய்கள் உடையும் நிலை உள்ளதால் கரைகளை பாதுகாக்க மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகள், தளவாட சாமான்கள் வழங்க வில்லை. வானிலை மோசமடைந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக உள்ளது’’ என்றார்.
இதேபோல பல உள்ளாட்சி பிரதிநிதிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திடீரென கரண்ட் கட் செல்போன் வெளிச்சத்தில் நடந்த அமைச்சர் விழா
காரைக்குடி தனி மாவட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம்
அனுமனுக்கு 5008 வடை மாலை
பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் மீண்டும் முளைக்கும் நெல் மணிகள் கல்லல் விவசாயிகள் கவலை
பாதாள சாக்கடை பணிகளை முடிக்க கோரி காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் கடைகள் அடைப்பு
பூவந்தியில் 9 ஆண்டுக்குபின் நெல் விவசாயம் கண்மாய் நீரை நம்பி களமிறங்கும் விவசாயிகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்