வாக்குப்பதிவு குறைந்த இடங்களில் அதிகப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை
11/25/2020 3:25:49 AM
சிவகங்கை, நவ.25: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குகள் பதிவான இடங்களை கண்டறிந்து அங்கு வாக்குப்பதிவை அதிகப்படுத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2011 மற்றும் 2016 சட்டசபை தேர்தலில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவாகின. காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரையில் உள்ள குறிப்பிட்ட வாக்குச்சாவடிகள், சிறுநல்லூர், பெரியகோட்டை, கீழப்பட்டமங்கலம், செவரக்கோட்டை, ஆத்தங்குடி, கிளாதரி, காளையார்மங்கலம், முத்தரசன், சிரமம், காஜ்சிரங்கால், பாகனேரி, மைக்கேல்பட்டணம், நடராஜபுரம், இடையமேலூர், மேப்பல், வைரவன்பட்டி, வி.புதுக்குளம், கல்லல், நகரம்பட்டி, வீரனேந்தல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊர்களில் குறைவான வாக்குகள் பதிவாகின.
இதில் கிராமங்கள் மட்டுமல்லாது நகரங்களிலும் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் குறைவான வாக்குகள் பதிவாகியிருப்பது குறித்து தேர்தல் கமிஷன் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி குறைவான வாக்குகள் பதிவானதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது 2021ல் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு ஏற்கனவே வாக்குப்பதிவு குறைந்த இடங்களில் வாக்குப்பதிவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் வெளியூர்களில் இருப்பது, வாக்குச்சாவடிகள் அருகில் இல்லாமல் தள்ளியிருப்பது, நகர்ப்புறங்களில் படித்தவர்கள் வாக்களிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பது, விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
குறைவான வாக்குப்பதிவான ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அங்குள்ள காரணத்திற்கு ஏற்ப வாக்குப்பதிவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது, ‘ஒருவர் வெளியூரில் இருந்து இங்கு வாக்கு பதிவாகாமல் இருந்தால் அந்த நபருக்கு இரண்டு இடங்களில் வாக்கு உள்ளதா என்பதை கண்டறிந்து வருகிறோம். எல்லோரையும் வாக்களிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்’ என்றார்.
மேலும் செய்திகள்
திடீரென கரண்ட் கட் செல்போன் வெளிச்சத்தில் நடந்த அமைச்சர் விழா
காரைக்குடி தனி மாவட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம்
அனுமனுக்கு 5008 வடை மாலை
பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் மீண்டும் முளைக்கும் நெல் மணிகள் கல்லல் விவசாயிகள் கவலை
பாதாள சாக்கடை பணிகளை முடிக்க கோரி காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் கடைகள் அடைப்பு
பூவந்தியில் 9 ஆண்டுக்குபின் நெல் விவசாயம் கண்மாய் நீரை நம்பி களமிறங்கும் விவசாயிகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்