ஆக்கிரமிப்புகள் அகற்றம்
11/25/2020 3:24:16 AM
கமுதி, நவ.25: கமுதி முத்துமாரியம்மன் நகர் பகுதியில் பல வருடங்களாக கழிவுநீர் வாறுகால் இன்றி இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மழை காலங்களில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக இருந்தது. இப்பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் கழிவுநீர் வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுத்து அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வரும் இடங்களில் பொதுப்பாதைகளில் தனியார் ஆக்கிரமிப்பு நிறைந்து காணப்பட்டது. இது சம்பந்தமாக முத்துமாரியம்மன் நகர் பகுதியினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாலைகளை அளவீடு செய்து முறைப்படுத்தி கால்வாய்களை அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில், வட்டாட்சியர் செண்பகலதா, உத்தரவின்பேரில், முத்து மாரியம்மன் நகர் சாலை அளவீடு செய்யப்பட்டது. இதில் 30 வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்ட சாலையை கண்டறிந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
மேலும் செய்திகள்
மழையால் விவசாயம் பாதிப்பு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் போகலூர் ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
கால்நடை முகாம் நடத்த கோரிக்கை
பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்
நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க திருவாடானை பகுதியில் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
தனியார் விடுதியில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்