ரூ.1.5 கோடி நிதி மோசடி பெண் உள்பட 4 பேர் கைது
11/25/2020 3:21:16 AM
திண்டுக்கல், நவ.25: திண்டுக்கல்லில் ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.நிலக்கோட்டையில் ஆனந்த், ஜெயராஜ் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் அறக்கட்டளை நடத்தி வந்தனர். இவர்கள் பொதுமக்களிடம் ரூ.1 லட்சம் கடன் பெற்றுத்தருவதாகவும், அதற்கு ரூ.6,100 கட்டினால் போதும் எனக்கூறி 300க்கும் மேற்பட்டோரிடம் ரூ.1.5 கோடிக்கும் மேல் பெற்றதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டபோது, தராமல் ஏமாற்றி வந்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் 3 நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்பட்டது. மேலும் வழக்கில் தொடர்புடைய ஜெயராஜ்(51), ஆனந்த்(32), காசியம்மாள்(45), மகாலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராமகிருஷ்ணன், வடிவேலு ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிதி நிறுவனத்தில் வேறு எவரும் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பட்டிவீரன்பட்டி அருகே மக்கள் கிராம சபை
கால்நடைகளுக்கு அளவான பொங்கல் கொடுத்தால் அமில நோயிலிருந்து பாதுகாக்கலாம்
கொடுத்த புகாருக்கு 4 நாளாகியும் நடவடிக்கை இல்லை அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
கொத்தப்புள்ளி பூவோடையில் மழைநீரில் மூழ்கிய ரயில்வே சுரங்க பாதை எம்பி ஆய்வு
பொங்கல் பரிசு வழங்க கோரி ஆட்டோ தொழிலாளர்கள் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்
பழநி தைப்பூச திருவிழாவிற்கு 3,500 போலீசார் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்