பனியன் தொழிலாளர்களுக்கு சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும்
11/25/2020 3:19:56 AM
திருப்பூர், நவ.25: திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு புதிய சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும் என அனைத்து பனியன் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து பனியன் தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் பி.என்.ரோட்டிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. பனியன் சங்க பொருளாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. பனியன் சங்க பொதுச்செயலாளர் சம்பத், சி.ஐ.டி.யு. பனியன் சங்க பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, தொ.மு.ச. பனியன் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் பூபதி, ஐ.என்.டி.யு.சி. சங்க செயலாளர் சிவசாமி, தலைவர் பெருமாள், எம்.எல்.எப் மாவட்ட செயலாளர் சம்பத், பனியன் சங்க செயலாளர் மனோகர், ஹெச். எம்.எஸ் பனியன் சங்க செயலாளர் முத்துசாமி, துணை செயலாளர் கெளதம் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பனியன் தொழிலாளர்களுக்கு புதிய சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெற வேண்டும். உடனடியாக இ.எஸ்.ஐ மருத்துவ பணிகளை தொடங்க வேண்டும். வரும் 26ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
10 மாதங்களுக்குப் பிறகு மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு
பல்லடத்தில் 43 பேர் மாயமான வழக்குகளுக்கு ஓராண்டில் தீர்வு
மாநகரில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்
வியாபாரி போல் நடக்கும் பருத்தி கழகம்
திருப்பூர் தெற்கு போலீசாரின் மனித உரிமை மீறலை கண்டித்து பல்வேறு கட்சியினர் கமிஷனரிடம் மனு
சாக்கடை கழிவு நீரால் சுகாதாரசீர் கேடு
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!