SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்மூரு போல வருமாங்கோ.... 216 வது ஆண்டை கொண்டாடிய கோவை

11/25/2020 3:15:11 AM

கோவை, நவ.25: ‘‘ நம்ம ஜில்லாவுக்கு 216 வருஷமாயிருச்சாம், சில்லுன வீசுற காத்தும், சிறுவாணி தண்ணியும், எந்த ஊர்லயும் கெடைக்காதுங்க,’’ என சமூக வலைதளங்களில் கோவை மக்கள் கருத்து பதிவிட்டு கலக்கினர். 1804ம் வருஷம் நவம்பர் 24ம் தேதி கோவை ஜில்லா மக்களின் அடையாள தினம். கோயமுத்தூர் மாவட்டம் உதயமான நாளை, கோவை தினமாக ‘ஜில்லா மக்கள்’ கொண்டாடி வர்றாங்க. 1801வது வருஷம் கொங்குநாட்டு பாளையக்காரர்களான தீரன் சின்னமலை மலபார், மைசூர் படைகளுடன் மோதி ஜெயிச்ச பிறகு கொங்கு நாடு தலைநகராக மாறியது. 1848 வது வருஷம் பிரிட்டீஷ்காரர் ராபர்ட் ஸ்டேன்ஸ் கோவை ஜில்லாவுக்கு நகராட்சி அந்தஸ்து தந்து நகராட்சி தலைவராக அரியாசனத்தில் உட்கார்ந்தார்.

ரோமானியகாரங்களோட வணிக வேட்டை, தில்லி சுல்தான் கூட்டத்தோடு ஆதிக்க ஆட்டம், விஜய நகர பேரரசுகளோட வெறியாட்டம், மதுரை நாய்க்கர், மைசூர் மன்னர், ஆற்காடு நவாப், திப்புவின் போர் படையெடுப்பு என உருக்குலைந்து கிடந்த கோவைக்கு ‘பிளேக் நோய்’ மரண பீதியை தந்தது. 1901 முதல் 1925ம் வருஷம் வரை 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது ஜனங்கள் ெகாத்து கொத்தாக செத்து போன சம்பவங்கள் கோவையின் மறையாத மரண சரித்திரமாக இருக்கிறது. குளங்களில் பரவிய நோய் கிருமியால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்ற விவரமும் ரொம்ப வருஷத்திற்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்டது. பிளேக் நோய் பரவிய பின்னால் தான், மேற்கு ெதாடர்ச்சி மலையில் சிறுவாணியை தேடி நமது முன்னோர்கள் காட்டிற்குள் போனார்களாம். பிரிட்டீஷ் இன்ஜினியர் ‘மைலோன்’ மூலமாக கும்கி யானைகளை வைத்து  சிறுவாணி அணையை கட்டி, குகை தோண்டி 1929ம் வருஷம் தண்ணீர் கொண்டு சேர்த்தனர்.

1888ம் வருஷத்தில் உருவான ஸ்டேன்ஸ் மில், 1831ல் உருவான சி.எஸ்.ஐ பள்ளி, 1880ல் வந்த புனித பிரான்சிஸ் பள்ளி, 1910ல் உருவான சர்வஜன பள்ளி, 1917ல் வந்த சபர்பன் பள்ளி, 150 வருஷத்திற்கு மேலான அரசு கலைக்கல்லூரி, பொதுப்பணித்துறை அலுவலகம், வனக்கல்லூரி, மாவட்ட பதிவாளர் அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம், மாவட்ட கருவூலம், குதிரை வண்டி கோர்ட்,  பாரதி பார்க் நில மட்ட நீர் ெதாட்டி, சோமசுந்தரா, காளீஸ்வரா மில், கோனியம்மன் கோயில், பட்டீஸ்வரர் கோயில். ராச கோசரி பெருவழி, போத்தனூர் ரயில் நிலையம், தபால் அலுவலகம், லட்சுமி மில், பைக்காரா திட்டம் என மாறாத எண்ணற்ற அடையாளங்கள் கோவையின் பெருமையாக கூறப்படுகிறது. கோவை தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டரில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பழங்கால கோவையின் அம்சங்களையும், அடையாளங்களையும் குறிப்பிட்டு மகிழ்ந்தனர். பழங்கால கோவையின் அபூர்வ படங்களும் வலை தளங்களில் அதிகளவு பகிரப்பட்டது. குறிப்பாக வெளிநாட்டில் வசித்த கோவை மக்களின் கோவை தின கொண்டாட்ட பதிவுகள் வெப்சைட்களில் குவிந்து வருகிறது. ேகாணிமுத்தூர், கோசர்புத்தூர், கோவன்புத்தூர், கோயமுத்தூர், ேகாயம்புத்தூர் என பெயர் வந்த கதையும் மக்களிடையே மகிழ்வை ஏற்படுத்தியது. கோவையின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் பெயர்களில் ஏராளமான வீதிகள் உள்ளது. இதில் சில பிரிட்டீஷ்காரர்கள் பெயர்களும் முக்கிய அடையாளமாக இருக்கிறது.

ஆட்சி பீடமான கோவை
கோவை மாவட்டத்தில் 170க்கும் மேற்பட்ட கலெக்டர்கள் பணியாற்றியுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் பிரிட்டீஷ்காரர்கள். கோவை தான், ெகாங்கு மண்டலத்தின் ஆட்சி பீடமாக இருந்துள்ளது. வானி என அழைக்கப்பட்ட ஆறு பிற்காலத்தில் பவானியாகவும், காஞ்சி மாநதி நொய்யலாகவும் மாறியது. கொங்கு நாட்டை ஆறைநாடு, தென்கரை நாடு, பூந்துறை நாடு, ஆனைமலை நாடு என 24 நாடுகளாக பிரித்து ஆட்சி செய்துள்ளனர். கோவையில் இருந்து கேரள செல்லும் பகுதி பாலக்காட்டு கணவாயாக இருக்கிறது. திப்பு சுல்தான் கோட்டை, மைசூர், விஜய நகர பேரரசுகளின் போர், ஆதிக்கம், ஜான் சலீவன் 1819ம் ஆண்டில் கோவையில் இருந்து மலைகாடு வழியாக உச்சி மலையை கடந்து ‘மந்து’ என்ற பகுதிக்கு சென்று ஓய்வு எடுக்க துவங்கினார். பிற்காலத்தில் மந்து உதகமந்து, உதகமண்டல், ஊட்டி என மாறியது தனி வரலாறு.

முதல் சினிமா இங்கே தான்...
தென்னிந்தியாவின் முதல் தியேட்டர் 1900ம் ஆண்டில் சாமிகண்ணு வின்சென்ட் என்பவர் வெரைட்டி ஹாலில் உருவாக்கினார். அந்த காலத்தில் பொழுதுபோக்கு மையம் அமைத்து வெரைட்டியான படங்களை காட்டியதால் இந்த பெயர் வந்தது. தற்போது அந்த இடம் டிலைட் தியேட்டராக மாறியது. இது தென்னிந்தியாவின் முதல் தியேட்டர். இங்கே மின்சார வசதியுடன் முதலில் பேசும் படம் திரையிடப்பட்டது சாதனை நிகழ்வு. 1931ல் ஜி.டி நாயுடுவின் கோைவ பொள்ளாச்சி பஸ் போக்குவரத்து, அவரது புதிய கண்டுபிடிப்புகள், 1922ல் கரும்பு நசுக்கும் கருவி, பருத்தி சுத்தம் செய்யும் கருவிகள் கோவையின் அடையாளமாக இன்னும் இருக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • corona-modi1

  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

 • myan-firing1

  மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!

 • itaklyyychha

  இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது

 • 01-03-2021

  01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-02-2021

  28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்