விழுப்புரம் அருகே தனியார் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
11/25/2020 1:38:36 AM
விழுப்புரம், நவ. 25: விழுப்புரம் அடுத்துள்ள கள்ளக்குறிச்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றை அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் குழந்தைவேல், சம்சுதீன் மகள் ஜெயிலானி, நாராயணசாமி மகன் செந்தில், குப்புசாமி மகள் அஞ்சலிதேவி ஆகிய 4 பேரும் சேர்ந்து நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதியிலுள்ள பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்தனர். பின்னர் பணம் செலுத்தியவர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதோடு, மேலும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தை ஆரம்பித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தனர். பணம் செலுத்திய பொதுமக்கள், தாங்கள் செலுத்திய பணத்தை தரும்படி கேட்டதை தொடர்ந்து அவர்கள் 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். பணம் கட்டி பாதிக்கப்பட்ட மக்கள், விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் 4 பேரும் சேர்ந்து ரூ.20 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய குழந்தைவேலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கில் தொடர்புடைய செந்தில் (30) என்பவரை விழுப்புரத்தில் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஜெயிலானி, அஞ்சலிதேவி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தடுப்பணையை உடைத்து தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவனின் உடல் மீட்பு
பைக்கில் கடத்திய 80 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பைக் விபத்தில் வாலிபர் பலி
மேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை ₹42 லட்சம்
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!