7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் 7 மாணவிகளின் கல்வி செலவை அய்யாத்துரை பாண்டியன் ஏற்றார்
11/25/2020 1:34:06 AM
தென்காசி, நவ.25: 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க சீட் கிடைத்த 7 மாணவிகளின் கல்வி செலவை அய்யாத்துரைப்பாண்டியன் ஏற்றுக் கொண்டார். சங்கரன்கோவிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் தென்காசி மாவட்டத்தில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பை பெற்ற சங்கரன்கோவில் கக்கன்நகர் மாணவி சத்யா, கடையநல்லூர் பிருந்தா, பிரீத்தா, செங்கோட்டை அஸ்வரா பேகம், பவ்ஜுல் ஹிதாயா, பூலாங்குடியிருப்பு கோமதி, தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பகுதியை சேர்ந்த வேலுமதி ஆகிய 7 மாணவிகளுக்கு 5 வருட மருத்துவப் படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை மற்றும் வெங்கடேஷ் குமார் நினைவு அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனத் தலைவரும், திமுக மாநில வர்த்தகர் அணி துணைத்தலைவருமான அய்யாத்துரைப்பாண்டியன் ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து நேற்று அந்த மாணவிகளுக்கு சங்கரன்கோவிலில் வைத்து பொன்னாடை அணிவித்து இனிப்பு மற்றும் முதல்வருட கல்வி கட்டணத்தை மாணவிகளுக்கு வழங்கி பாராட்டினார்.
மேலும் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை தாமிரபரணியில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு
மதுரா கோட்ஸ் சார்பில் அம்பை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவியாக திசையன்விளை அமுதா நியமனம்
9 மாதங்களுக்கு பிறகு களக்காடு தலையணை இன்று திறப்பு
வல்லம் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
அம்பை சமத்துவ பொங்கல் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்