இடிந்தகரையில் இரு தரப்பினர் மோதல் 9 பேர் காயம், 22 பேர் மீது வழக்கு
11/25/2020 1:33:41 AM
நெல்லை, நவ.25: இடிந்தகரையில் கடல் ஆமை ஏலம் விடுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கம்பு, கற்களால் தாக்கிக் கொண்டதில் 9 பேர் காயமடைந்தனர். இடிந்தகரையைச் சேர்ந்த கென்னடி(45), சீரஞ்சிவி(27), மைக்கேல்(42) ஆகியோர் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கிஷோக்குமார்(33), ஜான்(37), பீஸ்மன்(35), சகாய அருள்விஜய்(32), கதிராஸ்கோ(57), வில்பர்ட்(49) ஆகிய 6 பேர் குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் இடிந்தகரை கிழக்கு தெருவை சேர்ந்த கிஷோக் குமார் புகாரின் பேரில் பிரபு, ஸ்டீபன், சந்தாகுரூஸ், பிரமில்டன், ஆன்சோ, திலிபன், அஜித், மதன், பிரபாகர், கமல், ரெஜில்டன், அபினவ் ஆகிய 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ரெஜில்டன், அபினவ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இடிந்தகரை கீழத்தெருவை சேர்ந்த கென்னடி(45) என்பவரின் புகாரின் பேரில் கிஷோக், நஸ்ரேன், டிஸ்மன், நெப்போலியன், விமல், டாரஸ், வளன் அரசு, அன்றன், ரெஜி, பிரபு ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை தாமிரபரணியில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு
மதுரா கோட்ஸ் சார்பில் அம்பை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவியாக திசையன்விளை அமுதா நியமனம்
9 மாதங்களுக்கு பிறகு களக்காடு தலையணை இன்று திறப்பு
வல்லம் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
அம்பை சமத்துவ பொங்கல் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்