நெல்லை, தென்காசி மாவட்ட திமுக சார்பில் இன்று ‘தமிழகம் மீட்போம்’ பிரசார பொதுக்கூட்டம் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பேசுகிறார்
11/25/2020 1:33:33 AM
நெல்லை, நவ. 25: நெல்லை கிழக்கு, மத்திய, தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழகம் மீட்போம் காணொலி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 62 இடங்களில் தமிழகம் மீட்போம் காணொலி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. பாளை. ஐகிரவுண்டு பாம்பே தியேட்டர் அருகில் உள்ள இ.எம்.எஸ் திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பேசுகிறார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 150 பேருக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் பொற்கிழி வழங்கி பேசுகிறார். நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் இன்று மாலை 4 மணிக்கு தமிழகம் மீட்போம் தேர்தல் பிரசார சிறப்பு பொதுக்கூட்டம் 100 இடங்களில் நடக்கிறது. பாளை. நூற்றாண்டு மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் பொற்கிழி வழங்கி பேசுகிறார். கூட்டத்தில் காணொலி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும், மானூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கூட்டம் நடக்கிறது. இதில் திமுக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அப்துல்வஹாப் கேட்டுக் கொண்டுள்ளார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 51 இடங்களில் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. தென்காசி சுப்புராஜா மகாலில் நடக்கும் கூட்டத்தில் 254 பேருக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் பொற்கிழி வழங்குகிறார். இதேபோல் தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் 37 இடங்களில் காணொலியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. புளியங்குடி மூர்த்தி பாபா மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் துரை 150 பேருக்கு பொற்கிழி வழங்குகிறார்.
மதியம் 3 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டங்களில் காணொலியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார்.
மேலும் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை தாமிரபரணியில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு
மதுரா கோட்ஸ் சார்பில் அம்பை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவியாக திசையன்விளை அமுதா நியமனம்
9 மாதங்களுக்கு பிறகு களக்காடு தலையணை இன்று திறப்பு
வல்லம் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
அம்பை சமத்துவ பொங்கல் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்