ஆண் சிசு சடலம் கால்வாயில் மீட்பு கீழ்பென்னாத்தூரில் பரபரப்பு பிறந்து சில மணி நேரத்தில் வீச்சு
11/25/2020 1:31:07 AM
கீழ்பென்னாத்தூர், நவ.25: கீழ்பென்னாத்தூரில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசுவின் சடலத்தை கழிவுநீர் கால்வாயில் வீசிச்சென்றுள்ளனர். இதுகுறித்து ஏஎஸ்பி கிரண்ஸ்ருதி விசாரணை நடத்தினார். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் உழவர் சந்தை எதிரே நேற்று, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசுவின் சடலம் கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்டு கிடந்தது. அங்கு சுற்றித்திரிந்து கொண்டிருந்த நாய்கள் சடலத்தை இழுத்து தரதரவென சென்றன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டிவிட்டு, சடலத்தை மீட்டனர். உடனடியாக கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், ஏஎஸ்பி கிரண்ஸ்ருதி, டிஎஸ்பி(பயிற்சி) அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை மீட்டு அருகில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து, கால்வாயில் வீசப்பட்ட குழந்தை யாருடையது?, குழந்தை இறந்து பிறந்ததால் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கீழ்பென்னாத்தூரில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
பெரணமல்லூர் பகுதியில் கோயில்களில் காணும் பொங்கல் சிறப்பு வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 சிறப்பு மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் 138 பேர் கைது
ஆதமங்கலம் கிராமத்தில் எருது விடும் விழா கோலாகலம் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
அரசு இடத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா: ஆர்டிஓ ஆய்வு
பெரணமல்லூர், செய்யாறு, தண்டராம்பட்டில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!