பொய்கை மாட்டுச்சந்தையில் கலெக்டர் திடீர் ஆய்வு அடிப்படை வசதிகளுக்கு மக்கள் மனு
11/25/2020 1:30:07 AM
வேலூர், நவ.25: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று மதியம் கலெக்டர் சண்முகசந்தரம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நடைபெறும் மாட்டுச்சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் உழவு மாடுகள், எருதுகள், கறவை மாடுகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதில் கறவை மாடுகள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் வரும்.ஒவ்வொரு வாரமும் இச்சந்தையில் ₹1 கோடி வரை வர்த்தகம் நடக்கும்.
ஆனால் கொரோனா நெருக்கடி காரணமாக பல மாதங்களுக்கு பொய்கை மாட்டுச்சந்தை நேற்று மக்கள் நெரிசலுடன் காணப்பட்டதுவெறிச்சோடியே காணப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு சந்தை களைக்கட்டும் என்ற எதிர்பார்ப்பும் பொய்யானது. இந்த நிலையில் நேற்று நடந்த சந்தையில் கறவை மாடுகள், எருதுகள் என கால்நடைகள் அதிகளவில் வந்திருந்தன. இதனால் வர்த்தகமும் வழக்கமான நிலையை எட்டியது. இன்று வர்த்தகம் ₹1 முதல் ₹1.10 கோடி வரை எட்டியதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதற்கிடையில் நேற்று மதியம் திடீரென பொய்கை மாட்டுச்சந்தையில் கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார். வாரச்சந்ைதக்கு வரும் பொதுமக்கள் விவசாயிகளுக்கு தேவையான கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம், ஆடு, மாடு, கோழி, காய்கறி விற்பனை செய்வதற்கு தனித்தனியே இடம் ஒதுக்கீடு செய்வது, சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள் அமைத்தல் போன்றவை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது பொய்கை ஊராட்சி முன்னாள் தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான குமரபாண்டியன் பொய்கை சந்தைக்கு செய்யப்பட வேண்டிய அடிப்படை பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து ஆய்வுக்குப்பின் கலெக்டர் சண்முகசுந்தரம், பொய்கை வாரச் சந்தையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன் கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், வேளாண் இணை இயக்குனர் தீட்சித் உட்பட பலர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
150 இளம் வாக்காளர்கள், 18 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு சிறப்பு முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார் வேலூர் மாவட்டத்தில்
பொன்னையிலும் பறவைக்காய்ச்சல் பீதி பறவைகள் செத்து மடிவதால் பரபரப்பு ஆற்காட்டை தொடர்ந்து
குடியரசு தின கிராம சபா கூட்டம் ரத்து கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
இலவச செல்போன் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் வேலூரில் பரபரப்பு பார்வையற்ற, செவித்திறன் குறைந்த அனைவருக்கும்
போலி அறக்கட்டளையை நம்பி குவிந்த மாற்றுத்திறனாளிகள்
திமுக அரசு அமைந்தால்தான் மக்களுக்கு பாதுகாப்பு வேலூரில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி: மத்திய அரசின் எடுபிடி அதிமுகவை அகற்ற வேண்டும்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!