கிருஷ்ணாபுரம் நீர்தேக்க அணையிலிருந்து 900 கன அடி உபரிநீர் வெளியேற்றம்: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
11/25/2020 1:27:15 AM
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அங்குள்ள மலைகளிலிருந்து அதிக அளவில் மழைநீர் கிருஷ்ணாபுரம் நீர்தேக்க அணைக்கு வருவதால் வேகமாக நிரம்புகிறது. இதனால், அணையிலிருந்து உபரிநீர் நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பள்ளிப்பட்டு அருகே கொதஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைப்புரண்டு ஓடுகிறது. ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிப்பட்டு, திருத்தணி பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கிருஷ்ணாபுரம் அணைக்கு மழைநீர் வேகமாக நிரம்புவதால், 15வது முறையாக நேற்று முன்தினம் இரவு அணையிலிருந்து வினாடிக்கு 900 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் கொசஸ்தலை ஆற்றின் தரைப்பலங்கள் அனைத்தும் நீரில் முழ்கி கரையோர கிராமங்களிடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில் தரைப்பாலம் பகுதிகளில் வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை பாதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை: தொடர் மழையால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 32 அடி நீர் தற்போது 29.65 அடியை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 5 மணிக்கு வினாடிக்கு 1,000 கன அடி திறக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
அனுமன் ஜெயந்தி விழா
ஏரியில் மூழ்கி மீனவர் பலி
சாலை விரிவாக்க பணிக்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தகோரி கலெக்டரிடம் திமுக மனு
சமத்துவ பொங்கல் விழா
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு: எஸ்பி அரவிந்தன் தகவல்
சுடுகாட்டிற்கு செல்ல வழியில்லாததால் சடலத்துடன் மக்கள் சாலை மறியல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்