வாடகைக்கு புத்தம் புது கார்: மாருதி சுசூகி அறிமுகம்
11/25/2020 1:25:08 AM
சென்னை: மாருதி சுசூகி நிறுவனம், மாருதி சுசூகி சப்ஸ்கிரைப் என்ற திட்டத்தை டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், புனே உள்ளிட்ட நிறுவனங்களில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் சென்னையிலும் அறிமுகம் ஆகியுள்ளது. ஓரிக்ஸ் ஆட்டோ இன்ப்ராஸ்டிரக்சர் சர்வீசஸ் உடன் இணைந்து இது செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில், ஸ்விப்ட், டிசையர், விட்டாரா பிரஸ்சா, பலேனோ, சியாஸ், எக்ஸ்எல்6 மாடல் கார்களை, ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுக்கலாம். வாடிக்கையாளரின் பெயரிலேயே அந்த கார் பதிவு செய்து தரப்படும். மாதாந்திர வாடகையில் பராமரிப்பு, காப்பீடு போன்றவையும் அடங்கும்.
இதுகுறித்து மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவு) செயல் இயக்குநர் சஷாங்க் வத்ஸவா கூறுகையில், ‘‘திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சென்னை, மும்பை, அகமதாபாத், காந்திநகர் ஆகிய நகரங்களிலும் இந்த திட்டத்தை அறிமுகம் செய்கிறோம். இன்னும் 2 அல்லது 3 ஆண்டில் 40 முதல் 60 நகரங்களில் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். வாடகை ஒப்பந்த காலம் முடியும்போது வாடிக்கையாளர்களே அன்றைய சந்தை விலையில் காரை வாங்கிக் கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. 48 மாதங்களுக்கு ஸ்விப்ட் எல்எக்ஐ வாடகைக்கு எடுப்பவர்கள், மாதம் 15,196 வாடகை செலுத்த வேண்டி வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
குப்பை லாரி சிறைபிடிப்பு
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
தாமதமாக வந்ததால் வாத்து நடை தண்டனை மாணவன் பலியான விவகாரத்தில் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
ஜிஎஸ்டி செலுத்தாத வியாபாரியிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வரித்துறை அதிகாரி கைது
காதலனுக்கு வேறு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி
சென்ட்ரல் ரயில் நிலையம், அம்பத்தூர், தாம்பரத்தில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.5.95 லட்சம் பறிமுதல்
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!