பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
11/24/2020 3:58:56 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில், பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டியில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்குகிறது. இங்கு செல்போன், லேப்டாப், டிவி உள்பட மின் சாதன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில், 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாறுகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கேட்ட பணியாளர்களை கம்பெனி நிர்வாகம் பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. இந்நிலையில், பணியில் இருந்து ஊழியர்களை நீக்கியதை கண்டித்தும், ஊதிய உயர்வு வழங்ககோரியும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று முதல், நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் நிர்வாகத்தினர் மற்றும் செங்கல்பட்டு தாலூகா போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
மேலும் செய்திகள்
தமிழக அரசின் அறிவுறுத்தல்படி பள்ளிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன: காஞ்சி கலெக்டர் பேட்டி
மதுராந்தகம் அருகே சோகம் வாகன விபத்தில் தம்பதி பலி
மதுராந்தகம் விவோகானந்தா பள்ளியில் கொரோனாவால் பலியானர்களுக்கு அஞ்சலி
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சபை கூட்டங்கள்: மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தகவல்
மனைவியை குடும்பம் நடத்த அனுப்பாததால் மாமியாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: மருமகன் கைது
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: இழப்பீட்டு தொகை 11 லட்சம் வசூல்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!