பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் குடும்பநல நிரந்தர கருத்தடை சிறப்பு சிகிச்சை முகாம் வரும் 28 முதல் டிச. 4 வரை நடக்கிறது
11/24/2020 3:47:16 AM
பெரம்பலூர், நவ. 24: பெரம்பலூரில் நவீன வாசக்டமி விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தினை மாவட்டக் கலெக்டர் வெங்கட பிரியா துவக்கிவைத்தார். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான நிரந்தர நவீன கருத்தடைக்கான நவீன வாசக்டமி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் வெங்கட பிரியா நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள், மற்றும் குடும்பநல துறை சார்பில் ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீ ன கருத்தடை பிரசாரம் இருவார விழாவாக கடந்த 21ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடக்கிறது. அதில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடும்பநல நிரந்தர கருத்தடை சிறப்பு சிகிச்சை முகாம் வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடக்கிறது.
நவீன வாசக்டமி முறையானது 100 சதவீதம் பாதுகாப்பானது. பக்க விளைவுகள் இல்லை, மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை, கடின உழைப்புக்கு தடையில்லை. நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்று கொள்ளும் நபருக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,100, ஊக்குவிப்போருக்கு ரூ.200 அன்றே வழங்கப்படும் என்றார். இதைதொடர்ந்து விழிப்புணர்வு விளக்க கையேடு மற்றும் கைப்பிரதி ஆகியவற்றை கலெக்டர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராஜ்மோகன், பெரம்பலூர் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் அசோகன், மாவட்ட குடும்ப நல செயலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
பெரம்பலூரில் முதற்கட்ட மாதிரி வாக்குப்பதிவு பாிசோதனை
கலெக்டர் ஆய்வு கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்
பெரம்பலூரில் பரிதாபம் பெண் தீக்குளித்து சாவு 2 குழந்தைகள் தப்பினர்
கருவில் வளரும் குழந்தை பாலினம் பரிசோதனை மேற்கொள்ளும் ஸ்கேன் மையம் மீது கடும் நடவடிக்கை அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை
பெரம்பலூரில் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு கேட்டு ஆர்ப்பாட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்