கம்பம், கூடலூரில் கடைகளில் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது
11/24/2020 3:39:56 AM
கம்பம், நவ.24: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் கடைகளின் பூட்டை உடைத்து திருடிய இளைஞரை கம்பம் தெற்கு போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் கூடலூர் மெயின் பஜாரில் உள்ள ரெடிமேட் கடை, இரும்பு கடை மற்றும் பெட்டி கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணம் திருடு போனது. இதேபோல கடந்த நவ.18ல் கம்பம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே, மூன்று சக்கர வாகனங்களுக்கு உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணம் திருடு போனது. இதுதொடர்பாக உத்தமபாளையம் டி.எஸ்.பி சின்னக்கண்ணு உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு தனிப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் காவலர்கள் சுந்தரபாண்டியன், அழகுதுரை கொண்ட தனிப்படையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கம்பம் பூங்கா தெருவில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில், அவர் லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரத்தீஸ்குமார்(23) என்றும், கூடலூர் மற்றும் கம்பம் பகுதிகளிலுள்ள கடைகளின் பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தீஸ்குமாரை கைது செய்து உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்
உத்தமபாளையம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை நிறுத்தம்
மதுரைக்கு மாற்று தண்ணீர் திட்டம் கோரி கூடலூரில் கவன ஈர்ப்பு பேரணி
10 மாதங்களுக்கு பின் சுருளி அருவி திறப்பு குளிக்க தடை நீடிப்பால் ஏமாற்றம்
மானிய விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் பாதியில் நிற்கும் கட்டிட பணிகள்
சின்னமனூர் அருகே புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!