வேல் யாத்திரைக்கு தடை கோரி எஸ்பி அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் ஆர்ப்பாட்டம்
11/24/2020 3:39:40 AM
தேனி, நவ.24: தேனியில் பாஜக.வின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் தேனி எஸ்பி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் தேனி மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மணி முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் தமிழரசி, தலித் ராயன், நீலக்கண்ணன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பாஜக சார்பில் வருகிற 27ம் தேதி தேனியில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட போலீஸ் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்
உத்தமபாளையம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை நிறுத்தம்
மதுரைக்கு மாற்று தண்ணீர் திட்டம் கோரி கூடலூரில் கவன ஈர்ப்பு பேரணி
10 மாதங்களுக்கு பின் சுருளி அருவி திறப்பு குளிக்க தடை நீடிப்பால் ஏமாற்றம்
மானிய விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் பாதியில் நிற்கும் கட்டிட பணிகள்
சின்னமனூர் அருகே புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!