பயிர் சாகுபடி மட்டும் செய்யாமல் விவசாயிகள் தேனீயும் வளர்க்கலாம் வேளாண் அதிகாரி அறிவுரை
11/24/2020 3:39:21 AM
போடி, நவ.24: விவசாயிகள் பயிர் சாகுபடியை மட்டும் செய்யாமல் வருமானத்தை பெருக்க தேனீ, ஆடு, மாடுகள் வளர்ப்பு போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது. போடி அருகே சிலமலையில் வேளாண்மைத்துறை மற்றும் அட்மா திட்டத்தின்கீழ் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் , ஒருங்கிணைந்த பண்ணையம் தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது. தேனி வேளாண்மை இணை இயக்குநர் அழகுநாகேந்திரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். போடி வேளாண்மை அலுவலர் அம்பிகா வரவேற்றார்.
முகாமில் இணை இயக்குநர் நாகேந்திரன் கூறுகையில், விவசாயிகள் ஒரு பயிர் சாகுபடியை மட்டும் சார்ந்து இருக்காமல் மேலும் வருமானத்தை பெருக்க விவசாயம் சார்ந்த ெதாழில்களான தேனீ, ஆடு, மாடுகள் வளர்ப்பு போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும். விவசாயத்தில் உற்பத்தியை இரு மடங்காகவும், வருமானத்தை மும்மடங்காகவும் பெருக்கி கொண்டால் வருகின்ற காலத்தை சரியாக எதிர் கொள்ளலாம் என தெரிவித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் தெய்வேந்திரன், கால்நடை மருத்துவர் பாஸ்கரன், உதவி இயக்குநர் சண்முகசுந்தரம், பயிற்றுநர் மாரியப்பன் உள்பட 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்
உத்தமபாளையம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை நிறுத்தம்
மதுரைக்கு மாற்று தண்ணீர் திட்டம் கோரி கூடலூரில் கவன ஈர்ப்பு பேரணி
10 மாதங்களுக்கு பின் சுருளி அருவி திறப்பு குளிக்க தடை நீடிப்பால் ஏமாற்றம்
மானிய விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் பாதியில் நிற்கும் கட்டிட பணிகள்
சின்னமனூர் அருகே புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!