கால்பந்தில் பனைக்குளம் அணி முதலிடம்
11/24/2020 3:36:34 AM
தொண்டி, நவ.24: தொண்டி செய்யது முகம்மது அரசினர் மேல் நிலைப்பள்ளியில் தொண்டி ஸ்போட்ஸ் கிளப் மற்றும் தொண்டி புட்பால் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி நான்கு நாட்கள் நடைபெற்றது. போட்டியில் ராமநாதபுரம், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்த 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டது. நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. இதில் முதல் பரிசு 13 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையை பனைக்குளம் அணியினரும், இரண்டாம் பரிசை தொண்டி புட்பால் கிளப் அணியினரும், மூன்றாம் பரிசை மதுரை அணியினரும், நான்காம் பரிசை தேரிருள்வேலி அணியும் பெற்றது. சிறந்த ஆட்ட நாயகன் மற்றும் சிறந்த கோல் கீப்பருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி அப்துல் ரஹ்மான், அபுபக்கர், சாதிக் காஜியார், சாதிக் பாட்சா, ஜிப்ரி சுலைமான், இனாமல் ஹசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆதில், ரஹீம், செல்வகுமார் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
மழையால் விவசாயம் பாதிப்பு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் போகலூர் ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
கால்நடை முகாம் நடத்த கோரிக்கை
பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்
நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க திருவாடானை பகுதியில் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
தனியார் விடுதியில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்