மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா
11/24/2020 3:13:48 AM
கோவை,நவ.24: கோவையில் கொரோனா காரணமாக நேற்று 140 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 676-ஆக உயர்ந்தது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் புதியதாக 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 676-ஆக உயர்ந்துள்ளது. மேலும், தற்போது கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களை விட குணமடைந்து வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 163 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 379-ஆக உள்ளது. தற்போது, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ, தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 698 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தவிர, நேற்று கொரோனா தொற்றினால் யாரும் உயிரிழக்கவில்லை. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்பது 599-ஆக உள்ளது.
மேலும் செய்திகள்
பிரதமர் மோடி இன்று கோவை வருகை பாதுகாப்புக்கு 7 ஆயிரம் போலீசார் குவிப்பு
மேற்கு மண்டலத்தில் சட்ட விரோத செயல்கள் தடுக்கப்படும்
தமிழ்நாடு அக்ரிகல்ச்சர், ஹார்டிகல்ச்சுரல் சர்வீசஸ் பணிக்காலியிட தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் கோவையில் இன்று 700 பஸ்கள் ஓடாது
கோவையில் 5 ஆயிரம் லாரிகள் நாளை ஓடாது
வாடகை ஆட்டோக்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பதில் இழுபறி
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்