ஈரோடு மாவட்டத்தில் 2.55 லட்சம் கொரோனா பரிசோதனை
11/24/2020 3:12:04 AM
ஈரோடு,நவ.24: ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் சுமார் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 138 பேர் பலியாகி உள்ளனர். ஈரோடு அரசு மருத்துவமனை, காந்திஜி ரோட்டில் உள்ள மகப்பேறு மருத்துவமனை, கருங்கல்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், சூளை ஆரம்ப சுகாதார நிலையம், சூரம்பட்டி வலசு ஆரம்ப சுகாதார நிலையம், பெரியசேமூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா நிரந்தர பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு தினமும் இந்த மையங்களில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
இது தவிர ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கெட்டிசமுத்திரத்தில் குப்பை வண்டிகளை சிறை பிடித்த மக்கள்
19 பேருக்கு கொரோனா இரு பெண்கள் பலி
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்
ரயில் நிலையத்தில் தொடர்ந்து 6 முறை ஒலித்த சைரனால் பரபரப்பு
ஈரோடு டிஆர்ஓ இடமாற்றம்
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!